எரிபொருள் மற்றும் சுங்க கட்டண உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் மற்றும் சுங்க கட்டண உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

எரிபொருள் மற்றும் சுங்க கட்டண உயர்வைக் கண்டித்து இராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

எரிபொருள் மற்றும் சுங்க கட்டண உயர்வைக் கண்டித்து இராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்க கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு கண்டித்தும், கடுமையாக விலையை ஏற்றிக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசைக் கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர் காங்கிரஸ் தலைவர் கோபி, மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் வாணி இப்ராகிம், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மனித உரிமை பிரிவு அப்தாகிர், வழக்கறிஞர் பிரிவு அன்புச்செழியன், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மாவட்ட துணைத்தலைவர் காவனூர் கருப்பையா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெறவும் வலியுறுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!