மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் -பயணிகள் நடுவழியில் அலறி அடித்து ஓட்டம்

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் -பயணிகள் நடுவழியில் அலறி அடித்து ஓட்டம்
X
இராமேஸ்வரத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கி ஓட்டுநர். பயணிகள் நடுவழியில் அலறி அடித்து கொண்டு ஓட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் கடந்த 13 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராக இராமேஸ்வரம் பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இராமேஸ்வரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்தை இயக்கி வந்துள்ளார். ஆள் பற்றாக்குறை காரணமாகவும் சூழற்சி முறையில் ஓட்டுநர்களுக்கு பணி மாறுதல் அளிக்க வேண்டும் என கடந்த ஒரு வாரமாக திருச்சி செல்லும் பேருந்திற்கு பால்சாமி ஓட்டுனராக மாற்றபட்டுள்ளார்.

பால்சாமி திருச்சி பேருந்துக்கு பதிலாக மீண்டும் நாகர்கோவிலில் செல்லும் பேருந்தில் ஓட்டுநராக பணி மாற்றி தரும் படி அவ்வப்போது மது அருந்தி விட்டு பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து மாற்றி தராத கோபத்தில் ஓட்டுநர் பால்சாமி இன்று காலை சுமார் 12 மணி அளவில் ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் நடத்துனரும் சந்திரசேகரனுடன் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்க்கு வந்துள்ளார்.

பின்னர் 22 பயணிகளுடன் பேருந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓட்டுநர் பால்சாமி பேருந்தை சாலையில் நாலாபுறமும் ஓட்டியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சந்தேகமடைந்து ஓட்டுநரை விசாரித்த போது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால் பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் ஓட்டுநர் பால்சாமியிடம் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து பேருந்தை வேகமாக இயக்கி தங்கச்சிமடம் காவல் நிலையம் எதிரே இருந்த இரும்பு தடுப்பில் மோதி தடுப்பை சேதப்படுத்தி உள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து பேருந்தை பால்சாமி ஓட்டினால் கட்டுபாட்டை இழந்து பாம்பன் பாலத்தில் மோதி பேருந்து கடலுக்குள் போய் விடும் என்ற அச்சத்தில் நடத்துனர் சந்திரசேகரன் பாம்பன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாம்பன் பேருந்து நிலையத்தில் போலீசாரால் பேருந்து நிறுத்தப்பட்டது. பின் பயணிகள் மாற்றும் பேருந்துகளில் திருச்சி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பாம்பன் போலீசார் ஓட்டுனர் பால்சாமியை சோதனை செய்த போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பால்சாமி தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்