கல்லூரி மாணாக்கர்களுக்கு 2ஜிபி டேட்டா சிம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஸ் பொன்ராஜ் ஆலிவர், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாத தரவு அட்டைகளை (2 GB Data sim card) வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வந்தன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Card) வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 பொறியியல் கல்லூரிகள், 5 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 20 கல்லூரிகளில் பயிலும் 11,575 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஸ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா தரவு அட்டைகளை (2 GB Data sim card) வழங்கினார். இந்நிகழ்வின் போது, இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் குணசேகரன் உட்பட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu