தனுஷ்கோடி - கடலில் மிதந்த மர்ம பெட்டி..

தனுஷ்கோடி - கடலில் மிதந்த மர்ம பெட்டி..
X
ஒரு வேளை அதுவா இருக்குமோ - உளவுத்துறை விசாரணை.

தனுஷ்கோடி அருகே கடலில் கரை ஒதுங்கிய மிதவை பெட்டி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் மற்றும் சமையல் பொருட்கள் கடத்தல் சம்பவம், அந்நிய நபர்கள் ஊருடுவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,

இதனை கண்காணிக்க தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தனிபிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள தெற்கு கடற்கரை இரட்டை தாழை எதிரே உள்ள கடலில் 5 அடி நீளம் 3 அடி அகலம் 2 அடி உயரம் அளவு உள்ள சிகப்பு நிற மிதவை பெட்டி ஒன்று ஒதுங்கி உள்ளது,

அந்த பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இந்த பகுதியில் மிதவை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக தனிப்பரிவு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர், அதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிபிரிவு காவல் துறை இந்த மிதவையில் அந்நிய நபர்கள் யாரேனும் ஊருடுவி உள்ளார்களா, அல்லது இங்கிருந்து இலங்கைக்கு செல்வதற்காக செல்ல இருந்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!