ரஜினிகாந்த் திருமண நாளை முன்னிட்டு பிரார்த்தனை வழிபாடு

ரஜினிகாந்த் திருமண நாளை முன்னிட்டு பிரார்த்தனை வழிபாடு
X
இராமநாதபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த்- லதா திருமண நாளை யொட்டி மும்மத சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினி காந்த் -லதா திருமண நாளை (பிப். 26) யொட்டி அவர்கள் இருவரும் அனைத்து நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ, அவரது ரசிகர்கள் மும்மத பிரார்த்தனை வழிபாடு செய்தனர்.

இன்று இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் லட்சார்சனை விழா ருத்ரஜெபம், சிவ சகஸர நாமம், நாம ஜெப வேள்வியுடன் காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் 12 சிவாச்சார்யார் கலந்து கொண்டு ஒரு லட்சம் சிவ மந்திரங்கள் முழங்கினர். இதனை தொடர்ந்து 10 ஆயிரம் அகல் விளக்கு ஏற்றும் தீப வழிபாடு இன்று மாலை நடந்தது.

நாளை (பிப்ரவரி 20) ஏர்வாடி தர்ஹாவில் சிறப்பு மல்லீது ஓதி, இனிப்பு வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (பிப்ரவரி 21) ஓரியூர் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது. இந்த மூன்று நாட்களும் அன்ன தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி காந்த் அண்ணன் சத்யநாராயணன் கெய்க்வாட், கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்கள் இராமநாதபுரம் ஆர்.பி.பால நமச்சிவாயம், ஓய்வு பெற்ற காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மதுரை குமாரவேல், கோவை ஜே.பி.சண்முகம், ஆகியோர் மும்மத வழிபாடு ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!