மீன்வளத் துறையை கண்டித்து மீனவர்கள் போராட்டம்
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையை கண்டித்து பாரம்பரிய மீனவர்கள் காதுகளில் பூக்களை சுற்றி சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமேஸ்வரம் மண்டபம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி கரையோரங்களில் மீன் பிடிப்பதால் கடல்வளம் அழிவதுடன் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பாரம்பரிய மீனவர்கள் சிஐடியூ மீனவ தொழில் சங்கத்துடன் இணைந்து, தவறு செய்யும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல் நாடகமாடும் மீன்வளத்துறை கண்டித்து, மீனவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டும் பலமுறை புகார் தெரிவித்தும் காதில் வாங்காத மீன்வளத்துறை கண்டிக்கும் விதமாக சங்குகள் ஊதிக் கொண்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாரம்பரிய மீனவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மீன்வளத் துறை அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் போராட்டத்தில் எதுவும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu