சவுதியில் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டு வர மனு
சவுதியில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வரக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த அழகு என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டதாக மகன் தினகரனுக்கு அங்கிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் சந்தேகம் இருந்த நிலையில் உடலை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தினகரன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு முறையாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 76 நாட்களுக்கும் மேலாக எந்தத் தகவலும் இல்லை, தற்போது வரை தந்தையின் உடலை கொண்டு வராததால் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகம் மூலம் சவுதி தூதரகத்தில் பேசி உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu