மக்களின் ஜனாதிபதி, இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் நினைவு நாள்

மக்களின் ஜனாதிபதி, இந்திய ஏவுகணை நாயகன்  அப்துல்கலாம் நினைவு நாள்
X
ஏவுகணை நாயகன், விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை,11 வது குடியரசுத்தலைவர் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.நினைவுகளுடன்-இன்ஸ்டாநியூஸ்

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மாலை, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலுள்ள ஐஐஎம் கல்வி நிறுவன மாணவர்களிடம் உணர்ச்சிவசமாக உரையாற்றிய போது மயங்கி விழுந்து மரணமடைந்தார். அப்துல் கலாம் அவர்களின் மரணம் , வயது வித்தியாசமின்றி உலகத்தையே அழ வைத்தது. தலைசிறந்த விஞ்ஞானி, தொழிற்நுட்ப வல்லுனர், ஏவுகணை நாயகன், விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், 11 வது குடியரசுத்தலைவர் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படும் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார்.

இயற்பியலை விருப்ப பாடமாக கொண்டு, ஆழ்ந்து கற்று தேர்ந்து,1960- ம் ஆண்டு ராணுவ மேம்பாடு மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) இளம் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சியை தொடங்கி, பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) தனது ஆய்வு அறிவை விரிவுபடுத்தி ரோகினி-1 எனும் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவினார்.


இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற "பொக்ரான்" அணுகுண்டு சோதனையில் முக்கிய மூளையாக செயல்பட்டவர். 2002-ம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று இறுதிவரை "மக்களின்ஜனாதிபதி"யாக மக்களின் மனதில் நின்றவர் கலாம் . இவர் படைத்த அக்னி சிறகுகள்- இந்தியா 2020- எழுச்சி தீபங்கள்- ஆகியவை இளைய தலைமுறையினரின் இதயத்தை புரட்டி போட்டது. பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா, உள்ளிட்ட ஏறக்குறைய 15 விருதுகளை பெற்றவர் அப்துல்கலாம்.

கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

ஜூலை 27 , 2015 ம் ஆண்டு இந்தியாவின், மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30 ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அகிலத்தை அறிவியலால் வென்று இறுதிவரை பிரம்மச்சாரியாக வாழ்ந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் 6-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரின் சாதனைகளையும்-சேவைகளையும் நினைவுகூர்ந்து- அவர் வழி நடந்து; "வல்லரசு இந்தியாவை" உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அப்துல் கலாமின் மீது சார்பில் உறுதியேற்ப்போம்.

நினைவுகளுடன் : இன்ஸ்டாநியூஸ்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!