பேருந்தில் பிக் பாக்கெட் அடித்த வாலிபர் கைது

பேருந்தில் பிக் பாக்கெட் அடித்த வாலிபர் கைது
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்தில் பிக் பாக்கெட் அடித்தவர் கைது. சிறையில் அடைப்பு.

பரமக்குடி அருகே உள்ள கீழ பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவர் மதுரையில் இருந்து பார்த்திபனூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவர் செல்வத்தின் பாக்கெட்டில் ரூபாய் 150 திருடி உள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட செல்வம் பாண்டியனை கையும் களவுமாக பிடித்து பார்த்திபனூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!