பரமக்குடி அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவர் போலீசில் சரண்

பரமக்குடி அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவர் போலீசில் சரண்
X
பரமக்குடி அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் போலீசில் சரண்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அனிகுருந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த முருகானந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அவரின் மகள் அபிநயா வெங்கல குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து விட்டதாக கேள்விப்பட்டு உள்ளார். பரமக்குடி அருகே சோமநாதபுரம் என்ற இடத்தில் பூங்கோதை தனியாக வசித்து வந்துள்ளார். சோமநாதபுரத்தில் மனைவியை பார்க்க வந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம் மனைவி பூங்கோதையை நடுரோட்டில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து முருகானந்தம் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது