இராமநாதபுரம் மாவட்டத்தில் 667 இடங்களில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் நேரில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 667 இடங்களில் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் நேரில் ஆய்வு
X

தடுப்பூசி முகாமின் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டு வரும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 667 மெகா தடுப்பூசி முகாம்களில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகின்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் 667 இடங்களில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் போடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் கண்காணிப்பு அலுவலர் நிர்மல் ராஜ் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 667 இடங்களில் 75 ஆயிரம் டோஸ்கள் அனுப்பப்பட்டு மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றி கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார். ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சுமார் 10 முகாம்களுக்கு குறையாமல் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான செவிலியர்கள், மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 54 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil