பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
X

பரமக்குடியில் நள்ளிரவில்  தீ வைக்கப்பட்டதில் எரிந்த டூவீலர்கள்.

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே சந்தைத்திடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன் மற்றும் கீர்த்தி. இவர்கள் தங்களது வீட்டின் முன்பு டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வந்த மர்மநபர்கள், டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் மளமளவென எரிந்து டூவிலர் முழுவதும் எரிந்து நாசமாகியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!