மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள் பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்

மறுமுத்திரையிடாத எடையளவுகளை வணிகர்கள்  பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம்
X

பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடைகள் 

வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை.

ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையின் கீழ் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், மற்றும் முத்திரை ஆய்வர்கள் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள காய்கறிக்கடைகள் - பழக்கடைகள் கறிக்கடைகள், மீன்கடைகள் மற்றும் தெருவோர பகுதிகளிலுள்ள அனைத்து கடைகளிலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ்ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மறுமுத்திரையில்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 28 தராசுகள் மற்றும் 65 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எதிர்வரும் காலங்களில் வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்

Tags

Next Story
தினம் 1 கேரட்..!  பச்சையாக சாப்பிட்டால் உங்க முகம் பளபளவென மாறிடும் தெரியுமா...? | Carrot benefits in tamil