டீ டம்ளர் கழுவி,அயர்ன் செய்து வாக்கு கேட்ட வேட்பாளர்

டீ டம்ளர் கழுவி,அயர்ன் செய்து வாக்கு கேட்ட வேட்பாளர்
X
பரமக்குடி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டீ டம்ளர் கழுவியும், துணிகளை அயர்ன் செய்து கொடுத்ததும் வாக்கு சேகரித்தார்.

பரமக்குடியில் டீ டம்ளர் கழுவி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் விதவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கருப்புராஜா பல்வேறு வினோத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.அதன் தொடர்ச்சியாக இன்று சின்னக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது டீக்கடையில் டீ டம்ளரை கழுவி வினோதமாக வாக்கு சேகரித்தார். பின்னர் அருகிலுள்ள அயர்ன் கடையில் வேஷ்டி களையும் அயர்ன் செய்து வினோதமாக வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
ai business transformation