பரமக்குடி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

பரமக்குடி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
X

பேருந்தில் பின்புற கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

பரமக்குடி அருகே படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடத்துநர் உள்ளே வரச் சொன்ன ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து கமுதக்குடி கிராமத்திற்கு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தொங்கியதால் நடத்துநர் திருப்பதி மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து மாணவர்கள் பேருந்தின் பக்கவாட்டில் கையால் அடித்து சத்தத்தை எழுப்பி உள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மூவர் காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபின் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!