பரமக்குடியில் தேங்கி கிடக்கும் ரூ.1.84 கோடி மதிப்பு நெசவு சேலைகள்

பரமக்குடியில்  தேங்கி கிடக்கும் ரூ.1.84 கோடி மதிப்பு நெசவு சேலைகள்
X

நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

பரமக்குடியில் ரூ.1.84 கோடி மதிப்புள்ள நெசவு சேலைகள் தேங்கி கிடப்பதால், கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய நெசவாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி- எமனேஸ்வரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கள் மூலம், ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலை ரகங்கள் நெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உற்பத்தி செய்யப்பட்டுள்ள சேலைகளை விற்பனை செய்ய முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொழிலை தவிர வேறு தொழில் செய்ய முடியாத நிலையில் கைத்தறி நெசவாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே பரமக்குடி சரகத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், கோ-ஆப்டெக்ஸ் மூலம் வழங்கப்பட்ட உற்பத்தி திட்டத்தின் அடிப்படையில் சேலை ரகங்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனருக்கு அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் தலைவர் சேஷய்யன், செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence