கமுதி அருகே அச்சங்குளம் அரசு நூற்பாலையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திடீர்ஆய்வு

கமுதி அருகே அச்சங்குளம் அரசு நூற்பாலையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திடீர்ஆய்வு
X
அச்சங்குளம் கூட்டுறவு நூற்பு ஆலைத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட உணவகத்தை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார்.

கமுதி அருகே அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மதுரை சாலையில் அமைந்துள்ள அச்சங்குளம் கூட்டுறவு நூற்பு ஆலையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள தொழிலாளர்களின் நலன் கருதி புதிதாக அமைக்கப்பட்ட உணவகத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் அமைந்துள்ள அனைத்து விதமான இயந்திரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், நூற்பாலை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story