பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கையில் ஏலம்: தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கையில் ஏலம்: தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
X
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (பைல் படம்.
இலங்கை அரசால் தடுத்த வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான படகுகள் ஏலம் விடப்பட்டதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக மீனவர்களின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான தமிழக மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு இன்று காலை முதல் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நல்லிணக்க அடிப்படையில் படகுகளை தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும்மாறு கேட்டு கொண்டதின் அடிப்படையில் படகுகளை தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும்மாறு இலங்கை அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் தமிழக மீனவர்களால் இலங்கை யில் தடுத்து வைக்கபட்டிருந்த படகுகளை மீட்க முடியவில்லை.இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன்' வளத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில்இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள படகுகளை தமிழக மீனவர்கள் திருப்பி எடுத்து செல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் விபத்துள்ளாவதுடன் இலங்கை கடற்படை வீரர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதால் அந்த படகை அப்புறப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக படகுகளை ஏலமிட்டு கிடைக்கும் பணத்தை விசைப்படகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்மாறு தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை செல்ல முடியாத சூழ்நிலையில் பயனற்று இலங்கை வசமுள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விசைப்படகுகளுக்கு 5 லட்ச ரூபாயும், நாட்டு படகுகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக அறிவித்தது.இதனை அறிந்த இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை கடந்து இன்று முதல் வரும் 10ம் தேதி வரை அந்தந்த கடற்படை தளத்தில் வைத்து ஏலம் விட மீன் வளத்துறை உத்தரவிட்டிருந்ததது இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் ஏலம் துவங்கியதுஏலத்தில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் முன்பணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும், படகுகளை ஏலம் எடுக்கும் தொகையில் 25 சதவீதத்தை இன்று செலுத்தி 15 நாட்களுக்குள் மொதத் தொகையும் செலுத்தி ஒரு மாதத்திற்குள் படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கான ஏலம் யாழ்ப்பாணம் மாவட்டம் காரை நகர் கடற்படை முகாமில் நடைபெற்று வருகிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி இன்று காலை முதல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா