பரமக்குடியில் தரமற்ற விதை நெல் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு

பரமக்குடியில் தரமற்ற விதை நெல் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

பரமக்குடியில் தரமற்ற விதை நெல் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விதை ஆய்வு துணை இயக்குனர் திடீர் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் விதைக்கும் பணிகளை துவங்கியிள்ளனர். விரும்பிய நெல் ரகங்கள், பூச்சி மருந்துகள், உரங்கள் அரசு விற்பனை அங்காடிகளில் இல்லாததால் விவசாயிகள் தனியார் கடைகளை நாடி உள்ளனர். இதனால், தனியார் கடைகளில் விவசாயிகள் அதிக அளவு விதை நெல், பூச்சிக்கொல்லிகள், உரங்களை வாங்கி செல்கின்றனர். தனியார் உரக்கடைகளில் தரமற்ற விதை நெல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, விதை ஆய்வு துணை இயக்குனர் துரைகண்ணம்மாள், தலைமையில், விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பரமக்குடி பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு செய்தனர். தனியார் கடைகளில் இருந்து விதைநெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. விதை நெல் வாங்கப்பட்ட இடம், தேதி உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், உரங்கள், மருந்துகளின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் உரக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story