இராமநாதபுரம்: காலக்கெடு முடிந்து விதை விற்பனை உரிமம் புதுப்பிக்காவிட்டால் ரத்து

இராமநாதபுரம்: காலக்கெடு முடிந்து விதை விற்பனை உரிமம்  புதுப்பிக்காவிட்டால் ரத்து
X
காலக்கெடு முடிந்து விதை விற்பனை உரிமம் புதுப்பிக்காவிட்டால் ரத்து. விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம் காலக்கெடு முடிந்து, ஒரு மாத காலத்துக்குள் புதிப்பிக்க தவறினால் நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் துரைக் கண்ணம்மாள் எச்சரித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட அனைத்து விதை விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை செய்ய உரிமம் பெற்று இருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதேபோல் மொத்த விதை விற்பனையாளர்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விதை விற்பனை உரிமம் பெற்றுள்ளனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், விதை விநியோகம் செய்தவர் மற்றும் விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதை வாங்கியவர் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய விதை உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் கருவுல இணையதளம் வாயிலாக உரிமக் கட்டணம் ரூ.1000 ஆன்லைன் மூலம் செலுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் பின்னர் இராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது கடிதம் மூலமாக புதிய உரிமம் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விற்பனை நிலைய அமைவிட வரைபடம், சொத்து வரி ரசீது, வாடகை கட்டிடமாக இருந்தால் ரூ. 20 முத்திரைத்தாளில் 5 ஆண்டுக்கான ஒப்பந்த பத்திரம், ஜிஎஸ்டி மற்றும் டிஎன் ஒதுக்கீடு, ஆதார், விதை விற்பனை நிலையம் பெயரிலான வங்கி கணக்கு எண் மற்றும் மனுதாரரின் புகைப்படம் 3 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்க விரும்புவோர் மேற்படி ஆவணங்களுடன் உரிமம் புதுப்பிக்கும் படிவம், கட்டணம் ரூ. 500 செலுத்தி இணையதளம் மூலமாக உரிமத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் செய்து, உரிமம் காலாவதி தேதிக்குள் விண்ணப்பம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

உரிமம் காலக்கெடு முடிவடைந்த ஒரு மாத காலத்திற்குள் புதுப்பிக்க காலதாமத கட்டணம் ரூ. 500 கூடுதலாக செலுத்தி உரிமம் புதுப்பித்து கொள்ளலாம்.ஒரு மாத காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்க தவறினால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் துரைக் கண்ணம்மாள் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதை அலுவலர் ஜெயந்திமாலா உடன் இருந்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!