இராமநாதபுரம்: வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இராமநாதபுரம்: வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
X
மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்தந்த பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்தந்த பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பரமக்குடி,முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருப்பதால் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னம் பொறிக்கப்பட்ட மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பும் பணி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 431 வாக்கு மையங்களுக்கு தேவையான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள கூட்டுறவு ஒழுங்குமுறை கூட்ட கட்டிடத்திலிருந்து அந்தந்த மையங்களுக்கு பிரிக்கப்பட்டு தனி வாகனங்களில் ஆயுதமேந்திய போலீசாருடன் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்கு மையங்களுக்கு அனுப்பப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலர்களால் அந்தந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைத்து அறைகள் மூடப்படும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 1647 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. இதில் 278 பதட்டமான வாக்கு சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மத்திய துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபடுவார்கள். மேலும் கொரோனா பரவல் காரணமாக வாக்கு பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு பதிவு செய்ய மையத்திற்கு வரும் வாக்காளருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி வழங்கப்படும். கை உறை உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!