திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜகண்ணப்பன் பிரசாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜகண்ணப்பன்  பிரசாரம்
X

பரமக்குடி திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முருகேசன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான ராஜகண்ணப்பன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர், அபிராமம், காரடந்தக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து கிராம மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாற்று கட்சியில் இருந்து விலகி 40 நபர்கள் திமுகவில் இணைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!