540 போட்டோக்களால் பிரதமர் மோடியின் பிரமாண்ட படம்: பரமக்குடி இளைஞர் அசத்தல்

540 போட்டோக்களால் பிரதமர் மோடியின் பிரமாண்ட படம்: பரமக்குடி இளைஞர் அசத்தல்
X

பரமக்குடியில் கிருஷ்ண பிரசாத் என்ற இளைஞர் 540 புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தை தரையில் பதித்துள்ளார்.

540 புகைப்படங்களுடன் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட படம். பரமக்குடி இளைஞர் அசத்தல்.

540 புகைப்படங்களுடன் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட படம். பரமக்குடி இளைஞர் அசத்தல்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த தம்பதி தட்சிணாமூர்த்தி - ராஜலட்சுமி இவர்களின் மகன் கிருஷ்ண பிரசாத் (22). இவர் கொச்சினில் எம்பிஏ படித்து வருகிறார். புகைப்படத் துறையில் மிகுந்த ஆர்வம் மிகுந்த இவர். பட்ட மேற்படிப்புக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை மிகவும் பிடித்துள்ளது.

இதனை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று அளவில் 540 புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தரையில் பதித்துள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுற்றிலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்களும், முக்கிய மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உட்பட முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் புகைப்படம் அமைந்துள்ளது. இந்த முயற்சி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணபிரசாத் கூறுகையில்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் அரசியல் கட்சி தலைவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தரையில் பதித்து செய்துள்ளேன், 25 நாட்களில் 540 புகைப்படங்களை சேகரித்து டிசைன் செய்யப்பட்டது. 30 அடி நீளம், 18 அடி அகலத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டுவதற்கு ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் ஆனது என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!