இராமநாதபுரத்தில் பெட்டியை திறக்க சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைப்பு
போகலூர் ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான தபால் ஓட்டிகளை வைத்திருந்த பெட்டியின் சாவி இல்லாததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் ஓட்டு பெட்டி பூட்டு உடைக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.தபால் வாக்குகள் வைத்திருந்த பெட்டியின் சாவி தொலைந்ததால் பெட்டி உடைப்பு.
இராமநாதபுரம் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா்களுக்கான தோ்தல் சக்கரைக்கோட்டை ஊராட்சிக்கு நடைபெற்றது. இங்கு 5 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை அண்ணாப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பரமக்குடி மற்றும் போகலூா் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வார்டு 7 மற்றும் ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது போகலூர் ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான தபால் ஓட்டிகளை வைத்திருந்த பெட்டியை திறக்க முயன்ற போது பெட்டியின் சாவி இல்லாததால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டி பூட்டு உடைக்கப்பட்டது.
அந்த பெட்டியில் மொத்தமாக 61 தபால் ஓட்டுக்கள் இருந்தன. பின் அந்த ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்கள் பதிவு செய்த ஓட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றது. திருவாடானை உள்ளிட்ட பகுதிகளின் ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu