ஜிகா வைரஸ் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவை யில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ்  நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவை யில்லை:  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
X
செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி தயாரிக்கும் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதித்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுக்குமே தடுப்பூசி விநியோகிக்கமுடியும் என்று இராமநாதபுரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

புதிய ஜிகா வைரஸ்நோய் குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி, அரியக்குடி, சத்திரக்குடி பகுதிகளில் சுகாதாரத்துறையனரால் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்ததுடன், இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணிகள் மற்றும் ஆக்சிஜன் கிடங்கு உள்ளிட்டவர்களை நேரடியாக ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் இன்று மாலை ஆலோசிக்க இருந்த நிலையில் மத்திய அரசு புதிதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றியதால் வரும் நாட்களில் மாணவர் சேர்க்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஆலோசித்து அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

கடந்த ஆட்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் இடமாற்றம் என்பது வேறு மாதிரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது மிகவும் தெளிவாகவும், நேர்மையுடனும், கவுன்சிலிங் அடிப்படையில் பணச்செலவின்றி பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த கொரோனா உபகரணங்கள் முறைகேடுகள் அதிகளவு இருந்தது. தற்போது கடந்த இரண்டு மாதங்களாக முறைகேடுகளை சீர் செய்யப்பட்டு வருகிறது. முறையான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தற்போது உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ரூ. 700 கோடி செலவில் துவங்கப்பட்டது. குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமும் தயார் நிலையில் உள்ளது. தமிழக முதலமைச்சர் நேரடியாக சென்று செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தை ஆய்வு செய்து, இதற்காக தமிழக தொழில் துறை அமைச்சரை தில்லிக்கு அனுப்பி இந்த நிறுவனத்தை மத்திய அரசு முறைப்படி செயல்படுத்த வேண்டும் அல்லது மாநில அரசு எடுத்து நடத்திட அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.

ஆனால், இதுவரை மத்திய அரசு சார்பில் எந்த விதமான அறிவிப்பும் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால் இரண்டு மாதங்களில் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளை தமிழகத்தில் இருந்தே உற்பத்தி செய்து கொடுக்கலாம்.

மத்திய சுகாதாரத் துறை இணை இயக்குனர் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது குறித்து கேட்டபோது, அவ்வாறு அறிவிப்பு இதுவரை எதுவும் பெறப்படவில்லை தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து கொரோனா எண்ணிக்கை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசிடம் மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் இன்று வரை ஒரு கோடியே 50 லட்சத்தி 84 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை தமிழகம் முழுவதும் 60 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் அருகே கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜி கோ நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் அவருக்கு மகப்பேறு நடந்து குழந்தையும் தாயும் தற்போது நல்ல நிலையில் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தமிழக முதல்வரால் துவங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளை நேரடியாக மருத்துவத்துறையினர் சென்று அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.

மத்திய அரசால் பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் முன்னதாகவே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததால் சுகாதாரத்துறை குறித்து நன்றாக தெரியும் அவருக்கு அனுபவம் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil