பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தேர்தல் அறிக்கையும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான இதாயத்துல்லா தனது சொந்த செலவில் கட்டியுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடானை கரு மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் சங்கர் குமாவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகமே மழை வெள்ள நிவாரணங்கள் கேட்கிற சமயத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வறட்சி நிவாரணங்களை கேட்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்: 505 தேர்தலை அறிக்கைகளில் 303 தேர்தல் அறிக்கைகள் தற்போதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் பகுதிநேர ஆசிரியர்களின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படும். அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளுக்கு பதிலாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதற்காக ஜனவரி, மார்ச் மாதங்களில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
உர தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலுவிடம் தெரிவித்து மத்திய அரசிடம் பேசி உரத்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை நத்தை வேகத்தில் தமிழக அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு தமிழக அரசின் செயல்பாட்டை ஊரே பாராட்டுகிறது என்றார். பேட்டி: அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu