மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
X

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சித்ரா மருது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முகமது இக்பால் ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதியை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அனைத்து பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்களை அதிகாரிகள் மிரட்டுவதை தடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய 15வது நிதிக்குழு மானியத்தை ஊராட்சியின் அடிப்படை வசதிகளை செயல்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி ஊராட்சி மன்ற தலைவர்களின் முழுமையான அதிகாரத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.

ஊராட்சி தலைவர்களை அவமதிக்கும் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுலவர் மேகலா பணி நீக்கம் செய்ய வேண்டும். தேங்கி கிடக்கும் உபரி நிதிகளை பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளுக்கு செலவிட நிர்வாக அனுமதி வழங்க வேண்டும். 14, 15 வது நிதிக்குழு மானியம், ஊராட்சி நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியரின் மூலம் நிர்வாக அனுமதி பெறப்பட்டு நிறைவேற்றிய பணிகளுக்கு தொகையை விடுவிக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதிக்க வேண்டும்.

ஊராட்சிகளில் உள்ள ஊரணி, கண்மாய்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாறுவதற்கு சிறப்பு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story