ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாண்டியூர் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே பாண்டியூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை தரப்பினருக்கும், அதே ஊரை சேர்ந்த முத்துராமலிங்கம் தரப்பினருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனால் இருதரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சாமிதுரை என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சாமிதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து சாமிதுரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பாண்டியூர் ஊராட்சி தலைவியின் கணவர் என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!