ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் விழா: அஞ்சலி செலுத்த தடை - எஸ்.பி அதிரடி

ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் விழா: அஞ்சலி செலுத்த தடை - எஸ்.பி அதிரடி
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒண்டிவீரன் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தடை. காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒண்டிவீரன் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தடை. எஸ்.பி கார்த்திக் உத்தரவு.

ஒண்டிவீரன் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தடை விதித்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், தென்காசி மாவட்டம், மஜரா பச்சேரியில் ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. தற்பொழுது கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் கூட்டமாக கூட தடையிருப்பதால், பொதுமக்கள் மரியாதை செலுத்த வரவேண்டாம்.

பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்துவது, ஊர்வலங்கள், இருசக்கர வாகனங்களில் பேரணியாக செல்வது முற்றிலும் அனுமதியில்லை.

அரசு சார்பில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ள வரவேண்டாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் செல்ல வேண்டாம் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!