அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு அக்.5, 6 செல்ல தடை: ஆட்சியர் உத்தரவு
அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு 5, 6ம் தேதிகள் செல்ல தடை. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா உத்தரவு.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கோவில்கள், ஆலயங்கள் மற்றும் முசூதிகள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 06.10.2021 புதன்கிழமை அன்று மகாளய அமாவாசை நாளில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதாலும், திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாகி, அதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாக கூடும் என்பதாலும், மகாளய அமாவாசையானது 05.10.2021 மாலையே துவங்கி விடும் என்பதாலும், 05.10.2021 மற்றும் 06.10.2021 ஆகிய இரு நாட்களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் வழிபடவும் மற்றும் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
கொரோனா மூன்றாம் அலை பரவல் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu