நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்: ஆட்சியர் தகவல்

நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்: ஆட்சியர் தகவல்
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோா் சங்க இரண்டாம் கட்டத் தோதலுக்கான வேட்பு மனுக்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது:-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, முதுகுளத்தூா், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் நீா் வள, நிலவள திட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான இரண்டாம் கட்டத் தோதல் ஏப். 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆகவே நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா், உறுப்பினா்களுக்கான தோதலில் போட்டியிட விரும்புவோா் வரும் 18 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதிக்குள் தோதல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை வரும் 22 ஆம் தேதியில் திரும்பப் பெறவும், அன்று மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படவும் உள்ளது. வரும் 30 ஆம் தேதி தோதல் நடத்தப்பட்டு அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிச் சான்றுகளும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!