இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வுக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும், கம்பம் எம்.எல்.ஏ.வுமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். உறுப்பினர்களாக உள்ள எம்.எல்.ஏக்கள் அப்துல்வஹாப் (பாளையங்கோட்டை), அமலு (குடியாத்தம்), கிருஷ்ணமுரளி (கடையநல்லூர்), சந்திரசேகர் (பொன்னேரி), புகழேந்தி (விக்கிரவாண்டி), பெரியபுள்ளான் என்றசெல்வம் (மேலூர்), பொன்னுச்சாமி (சேத்தமங்கலம்), நல்லதம்பி (கங்கவல்லி), தேன்மொழி (நிலக்கோட்டை) மற்றும் வேலு (மைலாப்பூர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் நாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர். எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu