கவுன்சில் கூட்டத்தில் மனைவிக்கு பதில் களமிறங்கிய கணவர் திடீர் வாக்குவாதம்!
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரமக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிடிஓ செந்தாமரைச் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்த தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது தெளிசாத்தநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரிக்கு பதிலாக அவரது கணவர் சேதுபதி, கூட்டத்தில் பங்கேற்றார். கவுன்சிலர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுப்பதில்லை. அப்போது பேசிய அவர், தீர்மானங்கள் குறித்து தெரியபடுத்துவதில்லை, தேவையின்றி ஊராட்சி நிதி வீணடிக்கப்படுகிறது. இதனால் நிதி பற்றாக்குறையால் பல ஊராட்சிகளில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பெண் கவுன்சிலர்கள், அதிகாரிகள் இருந்த அறையில் "வாயில் ஐஸ் வச்சுக்கிட்டா செல்வது? " என ரவுடிசத்தில் ஈடுபட்டார். இனிவரும் யூனியன் கூட்டங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக குண்டர்களின் ரவுடிசம் அதிகமாகும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. தமிழக அமைச்சர்கள் காவல் நிலையங்களில் நேரடியாக தலையிட கூடாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு 24 மணிநேரம் ஆகாத நிலையில் யூனியன் கவுன்சில் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் ரவுடிசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu