ஊதியம் வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் .

அழகப்பா பல்கலைக் கழக கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரமக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறுப்பு கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது.

அதன்படி அரசு கல்லூரிகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களே ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது கடந்த ஜூன் மாதம் முதல் இன்று வரை ஊதியம் வழங்க அழகப்பா பல்கலைக்கழகம் மறுத்து வருகிறது.

இதனை கண்டித்து கல்லூரி வாசலில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது கூறிய கவுரவ விரிவுரையாளர்கள் அரசாணைப்படி மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஆறு மாத கால ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். அரசாணை 2021 – ன் படி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பு ஊதியத்தை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து இரவு 7 மணிவரையிலும் நடைபெற்றுவருகிறது. விடிய விடிய தங்களுடைய உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்காவிட்டாலும் தொடர்ந்து எங்களுடைய போராட்டம் நடைபெறும் பல்கலைக்கழகம் எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் ஊதியத்தை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே எங்களுடைய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறுவோம் என தெரிவித்து வருகின்றனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட பெண் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பெண் கவுரவ விரிவுரையாளர்கள் மயக்கமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!