இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை.

கடந்த வாரம் முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்ப சலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இராமநாதபுரம் நகர் மற்றும் அரண்மனை, ஆர்.காவனூர், பாப்பாகுடி, பழங்குளம், பேராவூர், பாரதிநகர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் மட்டுமல்லாமல் அன்றாட பணிகளுக்கு செல்லக் கூடியவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருந்த போதிலும் இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழை தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் தண்ணீர் பிரச்சினை நீங்கும் சூழல் உள்ளது. மேலும் விவசாயிகள் பருவகால விதைப்பு நேரம் என்பதால் தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நெல் மற்றும் மிளகாய் விதைக்க தொடங்கியுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business