அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது: டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி

அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது: டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி
X

அடாவடியாக பேசிய கடை பணியாளர்.

அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் விற்போம் என டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி வீடியோ வைரல்.

தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலைதான் கொடுப்பேன் அரசாங்கம் சொல்லி இருக்கிறது என்று குடிமகன் ஒருவர் கேட்டதற்கு, அந்த கடை பணியாளர் அடாவடியாக பேசி அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. கூடுதல் விலைக்கு தான் விற்போம். யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் எனக்கு கவலை இல்லை அதைப்பற்றி பயமும் இல்லை என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture