கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
X

கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - ரம்யா பொன்னு. இவர்களின் மகன் கணேஷ் பிரபு (21). இவர் 2019 ல் ஈரோட்டில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கோவாவில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

பின்பு நேபாள் போக்ரா நகரில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடந்த சர்வதேச அளவிலான கபடி போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 178 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் பரமக்குடி தோளூர் தெற்குப்பட்டியைச் சேர்ந்த வீரர் கணேஷ்பிரபு மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த வீரர் சுரேஷ்பாண்டி உள்பட 14 வீரர்கள் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.

இவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் இண்டோ நேபாள் இண்டர்நேசனல் சாம்பியன்ஷிப் கேடயம் வழங்கி கவுரவிக்கபட்டனர். பதக்கம் மற்றும் தேசிய கொடியுடன் இன்று ஊருக்கு திரும்பிய கணேஷ் பிரபுவுக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். டிரம் செட் அடித்து, வெடி வெடித்து, மாலை, சால்வை அணிவித்து மிக பிரம்மாண்டமாக வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!