இராமநாதபுரம் அருகே மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம் அருகே மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு
X
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் பலி.

இராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரும், இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் இராமநாதபுரம் சென்றனர். இந்த நிலையில் இராமேஸ்வரத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து, காரி கூட்டம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ் மற்றும் ராஜேஷ் கண்ணன் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் இராமநாதபுரத்தை அடுத்த பனையூர் பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ரவி என்பவர் பலியானார். மேலும் இராமநாதபுரத்தை அடுத்த பத்ராதரவை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதயதாஸ் என்பவர் வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்