இடத்தகராறில் தாய்,மகனை மண்வெட்டியால் தாக்கிய 3 பேரின் வீடியோ வைரல்.

இடத்தகராறில் தாய்,மகனை மண்வெட்டியால் தாக்கிய  3 பேரின் வீடியோ வைரல்.
X
பரமக்குடி அருகே இடத்தகராறில் தாயையும், மகனையும் தாக்கிய சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் இடத்தகராறில் தாயையும், மகனையும் தாக்கிய சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் மற்றும் நாகமுத்து இவர்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நாகமுத்து தரப்பினர் வடிவேல் மற்றும் அவரது தாய் சாவித்திரியை மண்வெட்டியால் தாக்கி, கற்களால் எறிந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடிவேலுவின் புகாரின் பேரில் நாகமுத்து, பஞ்சவர்ணம், கோபால் ஆகிய 3 பேர் மீது எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் தாக்கிய சண்டைக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!