பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர் கைது

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர் கைது
X

மேடவாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே பெண் ஆசிரியருக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு காெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது.

பரமக்குடி அருகே சத்திரக்குடி மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்களாக பரமக்குடியை சேர்ந்த மலர்விழி, நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் சந்திரன் பெண் ஆசிரியை மலர்விழிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து மலர்விழி சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆசிரியர் சந்திரனை சத்திரக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!