திமுகவினர் மோதல்: தடுத்த போலீசாருக்கு அடி

பரமக்குடி அருகே மாவட்ட எல்லையான பார்த்திபனுரில் இன்று மார்ச் 13 ஆம் தேதி திமுக வேட்பாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சமயம் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம் பரமக்குடி தொகுதி வேட்பாளர் முருகேசன் ஆகியோருக்கு திமுகவினர் வரவேற்பளித்தனர். அப்பொழுது திமுகவினர் ஏராளமான வாகனங்களில் வந்தனர்.
அதில் ஒரு கட்சியினரின் காரை மற்றொரு கார் உரசியது இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக் கொண்டனர். அதைப் பார்த்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்து விலக்கி விட்டனர். அதுசமயம் ஒரு தரப்பினர் குத்தியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரனுக்கு உதட்டில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu