த.மு.மு.க, மமக கட்சியின் சாதி மதம் பாராமல் தொடர் மனிதநேய சேவைகள்
ராமநாதபுரம் சமூக பணியில் இஸ்லாம் அமைப்புகள்.
தமிழகத்தில் கொரானா என்ற கொடிய நோயினால் மக்கள் பெரிய அளவில் பாதிப்படைந்து இருக்கும் வேலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரு பாதிப்படைந்தவர்களுக்கு உதவுதல் .உள்ளிட்ட பல்வேறு விதமான உதவிகள் செய்யும் வேலையில் தமுமுக மனித நேய பனிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது.
தமுமுக மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாகிருல்லாஹ் மற்றும் தமுமுக மாநில பொதுச்செயலர் பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோரின் வழிகாட்டுதல் அடிப்படையில் கொரானா பெருந்தொற்றால் பாதிப்படைந்து மரணமடைந்த அனைத்து சமுக மக்களையும் .அவர்களின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்து வருகின்றனர். இதுவரை 3000க்கும் மேற்பட்ட உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 35க்கும் மேற்பட்ட உடல்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள ஓரிகோட்டை, சேமன்வயல் ஆகிய ஊர்களை சேர்ந்த 40 ,55வயது மதிக்கதக்க இரு ஆன் உடல்களை அவர்கள் மத வழக்கபடி நல்லடக்கம் தமுமுக மாநில செயலர் சாதிக்பாட்சா, மருத்தவ அனி ஜாஸ், ரியாஸ், சமுக ஆர்வலரும் தொலைக்காட்சி செய்தியாளருமான முஹம்மது பஹ்ருல்லாஹ் ஷா, பரக்கத் அலி, அன்சாரி, ஆப்ரின் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர்.
மேலும் திருவாடானை தாலுகாவில் அவசர தேவைக்கு தமுமுக மமகவின் அவசர உதவிக்கு 9360514700, 9442320875 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu