மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்
X
மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த பரமக்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகலா போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்டு வண்டியில் வந்தார். பரமக்குடி ஒட்டப்பாலம் பகுதியிலிருந்து முக்கியமான பகுதிகளில் மாட்டு வண்டியில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மாட்டு வண்டியில் வந்து தேர்தல் அதிகாரி தங்கவேலிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story