காணை நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு: கால்நடை வளர்ப்போர் பரிதவிப்பு
பரமக்குடி அருகே தவளைக்குளம் கிராமத்தில் காணை நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பதால் கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
காணை நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு, கால்நடை வளர்ப்போர் பரிதவிப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தவளைக்குளம் கிராமத்தில் காணை நோய் தாக்கி மாடுகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர். தவளை குளம் கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. வீடுகள் தோறும் விவசாயிகள் கறவை மாடு வளர்த்து அதன் மூலம் லாபம் ஈட்டி வருகின்றனர். வழக்கமாக குளிர்காலங்களில் காணை நோய் தாக்காமல் இருக்க தடுப்பூசிகள் போடப்படுவது வழக்கம்.
ஆனால் தவளைகுளம் கிராம மக்கள் நயினார் கோயில் கால்நடை மருத்துவமனையில் தான் மாடுகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வார்கள், மருத்துவர்கள் இல்லாததால் கால்நடை மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது. தனியார் மருத்துவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் கிராம மக்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர். காணை நோய் தாக்கி இதுவரை 100க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.
நோய் தாக்கிய மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளன. வீட்டிலேயே மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. எனவே நயினார்கோயில் ஒன்றியத்தில் சிறப்பு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu