'அந்த மனசு தான் சார் கடவுள்': கோடை காலத்தை 'ஜில்' ஆக்கிய ஆட்டோ ஓட்டுனர்
பொதுமக்களுக்கு மோர் வழங்கும் ஆட்டோ டிரைவர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செய்யது கனி (45). இவர் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம், இலவச ஆட்டோ பயணம் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார்.
இதனை தொடர்ந்து கோடை வெயில் காரணமாக பரமக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு இலவசமாக மோர் வழங்கினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்.
அறிவுரை கூறுவது மட்டுமல்லாது இலவசமாக மோர் வழங்கி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu