முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
![முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை](https://www.nativenews.in/h-upload/2021/08/06/1221187-69.webp)
X
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகநாதன் வீடு.
By - Saral, Reporter |6 Aug 2021 1:46 PM IST
முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் அதிமுக முன்னால் ஒன்றிய செயலாளர் நாகநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் அதிமுக ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகளாக இருந்தவர் நாகநாதன். இவர், 2011 முதல் 2016 வரை போகலூர் ஒன்றிய சேர்மனாக இருந்துள்ளார். மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். போகலூர் யூனியன் சேர்மனாக இருந்த காலத்தில் சாலைகள், கலையரங்கம் கட்டியதில் ஊழல்கள் நடந்திருப்பதாக ஏற்பட்ட புகாரையடுத்து மாவட்ட நீதிபதி அனுமதியுடன் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
பரமக்குடி முனியாண்டிபுரம் காலனியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் 6க்கும் மேற்பட்ட போலீசார், சுமார் இரண்டு மணி நேரமாக சோதனை செய்து வருகின்றனர். யூனியன் சேர்மனாக இருந்த காலத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
சோதனையில் ரூ.15 லட்சம், 88 சவரன் தங்க நகைகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu