பிரச்சார வாகனத்தை ஓட்டியபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசார வாகனத்தை ஒட்டியபடி வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவர்வதற்காக நடனமாடி புரோட்டா செய்து, நாற்று நடவு செய்து என பல்வேறு விதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இன்று பரமக்குடி நகர் பகுதியில் ஓட்டபலம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பாரதி நகர் வேட்பாளருக்கு மலர்தூவி வரவேற்பளிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ முத்தையா வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று ஆதரவு கோரினார். அதனை தொடர்ந்து வேட்பாளர் சதன் பிரபாகர் பிரசார வாகனத்தை (ஜூப்) தானே ஓட்டியபடி வாக்கு சேகரித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu