சட்டசபையில் இருந்து வெளியேறி விவசாயிகளுக்கு அதிமுகவினர் துரோகம்: பிஆர். பாண்டியன்

சட்டசபையில் இருந்து வெளியேறி விவசாயிகளுக்கு அதிமுகவினர் துரோகம்: பிஆர். பாண்டியன்
X

அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேறி தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளனர் - பிஆர். பாண்டியன் பேட்டி.

அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேறி தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளனர் - பிஆர். பாண்டியன் பேட்டி.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது, சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேறி தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளனர் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர். பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..

வேளாண் சட்ட திருத்த மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசிடம் கலந்து பேசவில்லை. இது மாநில அரசின் சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளிடம் கலந்து பேசவில்லை. கொரோனா தொற்று அவசர காலத்தில் ஓரிரு மணி துளிகளில் பாராளுமன்றத்தில் மிகப்பெரிய சட்டத்தை விவசாயிகளுக்கு எதிராக பெருமுதலாளிகள் கொடுத்ததை நிறைவேற்றி உள்ளது.

வேளாண் திருத்த சட்டம் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக இருந்த அதிமுகவை பகிரங்கமாக கண்டிக்கிறோம். தற்போது தமிழக அரசு வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, அதிமுக செய்த தவறை உணராமல் மீண்டும் மீண்டும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து இருப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்திருக்கும் மிகப்பெரிய துரோகம் மட்டுமல்ல, இது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரானது என பேட்டியளித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!