இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்கள்: அரசு உத்தரவு
இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 3 பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழப்பெருங்கரை, தெளிச்சாத்தநல்லூர், தெய்வேந்திர நல்லூர், வழுதூர் ஆகிய கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவின் அடிப்படையில், தற்போது இந்த மூன்று கிராமங்களிலும் மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu