இலங்கையில் இருந்து 9 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து மேலும் 9 பேர் தனுஷ்கோடி வருகை. அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.இதனால், உணவுப்பொருட்கள்,பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, ராஜபக்சே அரசை பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.இதனையடுத்து, அவர்களிடம் மரைன் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இலங்கையிலிருந்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 16 பேர் வந்த நிலையில்,தற்போது மேலும் 9 பேர் தமிழகம் வந்துள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu